இந்தியாவின் முதல் 3டி தொழில்நுட்பத்தில் தபால் அலுவலகம் ஒன்று கர்நாடகாவில் அமைக்கப்பட்டு வருகிறது.
கர்நாடக மாநிலம், பெங்களூருவில் அல்சூர் பஜார் தபால் நிலையத்தில் 3டி பிரிண்டிங் தொழில்நுட்பம் பயன்படுத்தி புதிய கட்டடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. வீடுகள் மற்றும் பிற கட்டிடங்கள் முன்பு இந்த தொழில்நுட்பத்துடன் ஏற்கனவே கட்டப்பட்டிருந்தாலும், தபால் நிலையங்களை பொறுத்தவரையில் இது தான் முதல் முறையாகும்.
https://twitter.com/Himansh95224243/status/1644970451884720128?s=20
இந்த தபால் நிலையத்தின் கட்டுமான செலவு வழக்கமான கட்டிடம் கட்டுவதை விட சுமார் 30 முதல் 40 சதவீதம் குறைவாக உள்ளது மற்றும் 30 நாட்களில் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முன்னோடித் திட்டம் வெற்றி பெற்றால், எதிர்காலத்தில் அஞ்சல் துறையில் இன்னும் இதுபோன்ற சில கட்டிடங்களைத் கட்ட திட்டமிடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
https://twitter.com/KarnatakaIndex9/status/1562695098286358528?s=20
3டி முறையிலான தபால் அலுவலகம் சுமார் 1100 சதுர அடி மற்றும் கட்டுமான செலவு ரூ.23 லட்சம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அரசு கட்டடம் கட்டுவது பெங்களூருவாசிகளை வெகுவாக கவர்ந்துள்ளது, இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.







