முக்கியச் செய்திகள் இந்தியா

இந்தியாவில் 2 பேருக்கு ‘ஓமிக்ரான்’ உறுதி

இந்தியாவில் ஓமிக்ரான் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் தற்போது ஓமிக்ரான் தொற்று பாதிப்பு பெரும் அச்சுறுத்தலாக மாறி வரக்கூடிய நிலையில், உலக நாடுகள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன.

தற்போதுவரை 29 நாடுகளில் 373 பேர் ஓமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவிலிருந்து பெங்களூரு வந்த இருவருக்கு ஓமிக்ரான் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த ஓமிக்ரான் வைரஸ் தடுப்புக்குழு “ஒமிக்ரான் குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை; ஆனால், விழிப்புடன் செயல்பட வேண்டியது அவசியம், கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். ஒமிக்ரானை கண்டறிய 37 ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளது.

லாவ் அகர்வால்
லாவ் அகர்வால்

ஓமிக்ரான் தொற்று அச்சுறுத்தல் உள்ள நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு RT-PCR பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் அவர்கள் அடுத்தக்கட்ட சிகிச்சைக்கு அனுப்பப்படுவதாகவும் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். மேலும், தொற்று பாதிப்பு இல்லாத பயணிகள் 7 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

அதேபோல தற்போது தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களுக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே உள்ளன. கடுமையான அறிகுறிகள் இல்லை என்றும் அதேபோல ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்ட 2 பேருடன் தொடர்பில் இருந்தவர்கள் கண்டறிந்து கண்காணிக்கப்படுவார்கள், கொரோனா தடுப்பு நடைமுறை இதில் பின்பற்றப்படும் எனவும் லாவ் அகர்வால் கூறியுள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

“தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்கும் திட்டம் இல்லை” – மத்திய உள்துறை அமைச்சகம்

Halley Karthik

பெண்களுக்குப் பேருந்து கட்டணம் இலவசம்:சுவாரஸ்யமான மீம்ஸ்

Halley Karthik

மத்திய அரசின் புதிய விதிமுறைகளுக்கு எதிராக வாட்ஸ் அப் வழக்கு!

Halley Karthik