முக்கியச் செய்திகள் தமிழகம்

காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டம்: விரிவான திட்ட அறிக்கை தயார்

காவிரி-வைகை – குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரித்து முடித்து விட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டம் என்பது, வெள்ளக் காலங்களில் காவிரியில் உபரியாக வெளியேறும் நீரை கரூர் மாவட்டத்தின், மாயனூர் தடுப்பணையில் தடுத்து, திருச்சிராப்பள்ளி , தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டங்களின் வறண்ட பகுதிகள் வழியாக குண்டாற்றுடன் பாசானக் கால்வாய்களை வெட்டி இணைக்கும் திட்டமாகும்.

இத்திட்டம் மூலம் கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர் மற்றும் தூத்துக்குடி என 7 மாவட்டங்கள் பயன்பெரும். இத்திட்டத்தை பிப்ரவரி 2021-ல் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

காவிரி- குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், காவிரி-வைகை – குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரித்து முடித்து விட்டதாக மத்திய அரசு மக்களவையில் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் கவுசலேந்திர குமார் என்ற மக்களவை உறுப்பினர் நதிதிகள் இணைப்பு தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் பிஸ்வேஸ்வர் டூடு, “காவிரி-வைகை – குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு விரிவான திட்ட அறிக்கை மற்றும் காவிரி – பெண்ணாறு நதிகள் இணைப்பு திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரித்தாகிவிட்டது.

அதேபோல பம்பா – அச்சன்கோவில்- வைப்பாறு ஆகிய நதிகள் இணைப்புக்கான சாத்தியக்கூறு அறிக்கையும் தயாரிக்கப்பட்டுள்ளது.” என்று கூறியுள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

வெளியானது ‘நவரசா’ டீசர்

அனைத்துவித கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றார் டிவில்லியர்ஸ்

Halley Karthik

நீட் தேர்வை ஒத்திவைக்கும் திட்டம் இல்லை: தமிழச்சி தங்கபாண்டியன் கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்

Halley Karthik