பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பந்துவீச்சு தேர்வு!…

டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். 3-ஆவது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்படும், இந்தியா, பாகிஸ்தான் இடையேயான போட்டி, குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள பிரதமர்…

டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

3-ஆவது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்படும், இந்தியா, பாகிஸ்தான் இடையேயான போட்டி, குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி மைதானத்தில் இன்று மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது.

இந்நிலையில், டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். நடப்பு உலகக் கோப்பை தொடரில் இரு அணிகளும் தலா இரண்டு போட்டிகளில் வெற்றிவாகை சூடியுள்ளன. உலகக் கோப்பை தொடர்களில் இதுவரை நடைபெற்ற 7 போட்டிகளிலும் இந்திய அணியே வெற்றி வாகை சூடியுள்ளது. இந்த சாதனையை தொடரும் முனைப்பில் இந்திய அணி களமிறங்குகிறது. மேலும், அகமதாபாத் மைதானத்தைச் சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.