சூர்யா – 43 படத்தின் அடுத்த அப்டேட் வெளியாகி அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
நடிகர் சூர்யா தற்போது கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து, அவரின் 43-வது படத்தை இயக்குநர் சுதா கொங்காரா இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. முன்னதாக, சுதா கொங்காரா இயக்கிய ‘சூரரைப் போற்று’ படத்தில் நடித்து சிறந்த நடிகருக்கான தேசிய விருதை சூர்யா வென்றிருந்தார். இந்நிலையில், மீண்டும் இக்கூட்டணி இணைய உள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மேலும், சூர்யா – 43 படத்தில் நடிகர் துல்கர் சல்மான், நடிகை நஸ்ரியா ஆகியோர் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. தற்போது, இப்படத்தில் சூர்யாவுக்கு வில்லனாக நடிக்க பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவிடம் தயாரிப்பு நிறுவனம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் வர்மாவும் நடிகை தமன்னாவும் காதலித்து வருவதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இப்படத்தின் ஷூட்டிங் அடுத்த வாரம் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.







