ஆசிய கோப்பை கிரிக்கெட் : வங்க தேசத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான்!

ஆசிய கோப்பை கிரிக்கெட சூப்பர் 4 சுற்றில்  வங்க தேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. லாகூரில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்க தேசம் முதலில் பேட்டிங்…

ஆசிய கோப்பை கிரிக்கெட சூப்பர் 4 சுற்றில்  வங்க தேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.
லாகூரில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்க தேசம் முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 38.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 193 ரன்கள் எடுத்தது. அதிக அளவாக முஷ்பிகுர் ரஹிம் 64 ரன்களும், கேப்டன் ஷகிப் அல் ஹசன் 53 ரன்களும் சேர்த்தனர். ஹரிஸ் ரவுப் 4 விக்கெட்டும், நசீம் ஷா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் வீரர்கள் களம் இறங்கினர். ஆனால் 39.3 ஓவரில் வெற்றி இலக்கான 194 ரன்களை வங்க தேச வீரர்கள் எட்டினர். இமாம் ஹல் உக் 78, முகமது ரிஸ்வான் 63 ரன்கள் குவித்தனர். அபாரமாக பந்து வீசி 4 விக்கெட்டுகள் சாய்த்த ப்ளேயர் ஆப் தி மேட்ச் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.