முக்கியச் செய்திகள் இந்தியா தொழில்நுட்பம் செய்திகள்

அலெக்சாவிடம் 19,000 முறை ஐ லவ் யூ சொல்லும் இந்தியர்கள்!

அமேசானின் அலெக்சா ஸ்பீக்கரிடம் இந்தியர்கள் நாள் ஒன்றுக்கு ஐ லவ் யூ என்று 19 ஆயிரம் முறை கூறுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமேசான் நிறுவனத்தின் வாய்ஸ் அசிஸ்டென்ட் கேட்ஜட்டான அலெக்சா ஸ்பீக்கர் மிகவும் பிரபலம். அலெக்சா ஸ்பீக்கரை அறிமுகப்படுத்தி மூன்று ஆண்டுகளான நிலையில், இந்தியாவில் 2020ஆம் ஆண்டில் அலெக்சா ஸ்பீக்கரிடம் மக்கள் உரையாடல்கள் 67 சதவிகிதம் அதிகரித்துள்ளாக அமேசான் தெரிவித்துள்ளது.

இந்தியர்கள் நாள் ஒன்றுக்கு மட்டும் 19 ஆயிரம் முறை, ‘ஐ லவ் யூ அலெக்சா’ எனக் கூறுவதாகவும் இந்த தரவு எண்ணிக்கையானது 2019ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் 1,200% உயர்ந்துள்ளதாக தரவுகள் நமக்கு காட்டுகின்றன.

இப்போது வருகின்ற ஸ்மார்ட் போன்களில் அலெக்சா ஸ்பீக்கர், இன்பில்ட் ஃபீச்சர் வசதி செய்யப்பட்டுள்ளது. அது ரெட் மி நோட் 9 ப்ரோ, ஒன் பிளஸ் நோர்டு உள்ளிட்ட ஆறு ஸ்மார்ட் போன்களில் இந்த வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது.

அலெக்சா ஸ்பீக்கர்களை ஐம்பது சதவிகிதம் மெட்ரோ நகரங்களை சாராத மக்கள் பயன்படுத்துவதாக அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement:
SHARE

Related posts

திமுக எம்.பி. பெயரில் போலி பாஸ் வைத்திருந்த நபர் கைது!

Jeba Arul Robinson

திடீரென வெடித்துச் சிதறிய ’இயர்போன்’: இளைஞர் பரிதாப பலி

Gayathri Venkatesan

“மாணவச் செல்வங்களே, நம்பிக்கை இழக்காதீர்கள்…” வைகோ அறிக்கை

Halley karthi

Leave a Reply