தமிழகம்

தமிழகத்தில் இன்று 464 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 464 பேருக்கு கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் தற்போது படிப்படியாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலை வெளியிட்டது. அதன்படி, தமிழகத்தில் இன்று 464 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,42,261 பேராக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 143 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,32,464 ஆக அதிகரித்துள்ளது.

இன்று 495 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தனர். இதன்மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 8,25,520 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் இன்று 4 பேர் உயிரிழந்ததையடுத்து மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,387 ஆக அதிகரித்தது. தற்போது மருத்துவமனையில் 4,354 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement:
SHARE

Related posts

சாதியத்திற்கு எதிரான காட்டுப்பேச்சி ’மாடத்தி’

Halley karthi

“சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் சக்தியுடன் அதிமுக மிகப்பெரிய வெற்றிபெறும்” – முதல்வர் பழனிசாமி

Jeba Arul Robinson

தூத்துக்குடியில் சீமான் பரப்புரை!

Halley karthi

Leave a Reply