ஜெர்மனி, ஸ்பெயின் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய ஹாக்கி மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் செப்டம்பர் 23 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 8 ஆம் தேதி வரை சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெறுகிறது. இதற்காக ஆயத்தமாகும் இந்திய மகளிர் அணி, ஆசிய போட்டிகளுக்கு முன்னதாக ஜெர்மனி மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.
குறிப்பாக ஜெர்மன் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி ஜூலை 16 முதல் ஜூலை 19 ஆம் தேதி வரை சீனாவுடன் ஒரு பயிற்சி ஆட்டமும், ஜெர்மனியுடன் 2 பயிற்சி ஆட்டத்திலும் விளையாடவுள்ளது. அதனை தொடர்ந்து ஸ்பெயின் ஹாக்கி கூட்டமைப்பின் 100 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடத்தப்படும் ஸ்பானிஷ் ஹாக்கி தொடரில் பங்கேற்கிறது.
ஜூலை மாதம் 25 முதல் 30 ஆம் தேதி வரை நடைபெறும் ஸ்பானிஷ் தொடரில் தென்னாப்ரிக்கா, இங்கிலாந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகளை எதிர்கொண்டு விளையாடவுள்ளது. இதில் கலந்து கொள்ளும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.இந்திய அணிக்கு கேப்டனாக கோல் கீப்பர் சவிதா நியமிக்கபட்டுள்ள நிலையில், துணை கேப்டனாக தீப் கிரேஸ் எக்கா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இரண்டாவது கோல் கீப்பராக பிச்சு தேவி கரிபம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்திய மகளிர் ஹாக்கி அணி விவரம்
சவிதா (கேப்டன்), பிச்சு தேவி கரிபம் (து கேப்டன்), தீப் கிரேஸ் எக்கா, நிக்கி பிரதான், இஷிகா சவுத்ரி, உதிதா, சுஷிலா சனு புக்ரபம், நிஷா, மோனிகா, சலீமா, நேஹா, நவ்நீத் கௌர், சோனிகா, பல்ஜீத் கௌர், வைஷ்வனி விட்டல் பால்கே, ஜோதி சேத்ரி, வந்தனா கதாரியா, லால்ரேம்சியாமி, சங்கீதா குமாரி, தீபிகா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.






