மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட ஆசியக்கோப்பை 2023 இறுதிப்போட்டியில், இந்திய அணி மிகவும் சுலபமாக 51 ரன்கள் இலக்கை அடைந்து, 8வது முறையாக ஆசியகோப்பையை இந்திய அணி கைப்பற்றியது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதியாட்டத்தில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு 51 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதலில் பேட்டிங் செய்துள்ள இலங்கை அணி 50 ரன்னில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. இந்திய அணி தரப்பில் முகம்மது சிராஜ் 6 விக்கெட்டுகளையும். ஹர்திக் பாண்ட்யா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
பின்னர் பேட்டிங்கில் களமிறங்கிய இந்திய அணியின் ஓபனிங்கில் இஷான் கிஷனும், சுப்மன் கில்லும் களத்தில் இறங்கினர். 4 ஓவர்களின் முடிவில் கிஷன் 14 ரன்களும், கில் 19 ரன்களும் எடுத்திருந்தனர். 276 பந்துகளில் 17 ரன்களே இலக்காக இருந்தது. 5 ஓவர்கள் முடிவில் கிஷன் 21 ரன்களும், கில் 23 ரன்களும் எடுத்து மொத்தம் 45 ரன்கள் குவித்திருந்தனர்.
பின்னர் தொடங்கிய 5வது ஓவரில் 5 ரன்கள் எடுத்தனர். பின்னர் 6வது ஓவரின் முதல் பந்தில் இந்திய அணி தனது இலக்கை எட்டியது. 10விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆசிய கோப்பை 2023 இறுதிப்போட்டிகள் மிகவும் சுலபமாக இந்திய அணி கைபற்றியது. இதன்மூலம் இந்திய அணி 8வது முறையாக ஆசியகோப்பையை கைப்பற்றியது.







