`Keep Calm’ – வெளியானது ‘லியோ’ திரைப்படத்தின் தெலுங்கு போஸ்டர்…!

நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள லியோ திரைப்படத்தின் தெலுங்கு போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், இயக்குநர்கள் மிஷ்கின்,…

நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள லியோ திரைப்படத்தின் தெலுங்கு போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். சமீபத்தில், நடிகர்கள் சஞ்சய் தத் மற்றும் அர்ஜுன் ஆகியோரின் பிறந்தநாள்களை முன்னிட்டு சிறப்பு கிளிம்ப்ஸ் விடியோக்களை படக்குழு வெளியிட்டிருந்தது.

இப்படத்தின் எடிட்டிங் பணிகளைத் தொடர்ந்து அடுத்ததாக விஎஃப்எக்ஸ் பணிகள் ஆரம்பமாகியுள்ளன. இதன்பின், டப்பிங் மேற்கொள்ளபட உள்ளது. அக்டோபர் 19ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளதால் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படத்தின் தரத்தை தீவிரமாக மெறுகேற்றி வருகிறார். இப்படத்தின் இரண்டாவது பாடலும் விரைவில் வெளியாக உள்ளது.

https://twitter.com/Dir_Lokesh/status/1703385816666648943

இந்நிலையில் லியோ படத்தின் தெலுங்கு போஸ்டர் வெளியாகியுள்ளது. ”Keep calm and avoid the battle” என்ற வாசகங்களுடன் வெளியான போஸ்டர்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்த போஸ்டரை படக்குழுவும், இயக்குநர் லோகேஷும் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். நேற்றைய தினம் SIIMA விருது நிகழ்ச்சியில் பேசிய லோகேஷ் லியோ படத்தின் புரோமோஷன் வேலைகள் விரைவில் தொடங்கும் எனக் கூறியிருந்தார். இந்நிலையில் அந்தப் படத்தின் போஸ்டர் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.