இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஒருநாள் போட்டிகளில் புதிய சாதனை!

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஒருநாள் போட்டிகளில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அகமதாபாதில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில்…

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஒருநாள் போட்டிகளில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

அகமதாபாதில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 240 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இப்போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அதிரடியாக 31 பந்துகளில் 47 ரன்கள் குவித்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். இன்றையப் போட்டியில் மூன்று சிக்ஸர்கள் அடித்ததன் மூலம் ஒருநாள் போட்டிகளில் புதிய சாதனை ஒன்றையும் அவர் படைத்துள்ளார்.

ஒருநாள் போட்டிகளில் ஓர் அணிக்கு எதிராக அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரராக ரோஹித் சர்மா மாறியுள்ளார். அவர் ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மட்டும் 86 சிக்ஸர்களை விளாசியுள்ளார்.

ஒருநாள் போட்டிகளில் ஒரு அணிக்கு எதிராக அதிக சிக்ஸர்கள் விளாசியவர்கள்:

  • ரோஹித் சர்மா – 86 சிக்ஸர்கள் – ஆஸ்திரேலியாவுக்கு எதிராக
  • கிறிஸ் கெயில் – 85 சிக்ஸர்கள் – இங்கிலாந்துக்கு எதிராக
  • ஷகித் அஃப்ரிடி – 63 சிக்ஸர்கள் – இலங்கைக்கு எதிராக
  • சனத் ஜெயசூர்யா – 53 சிக்ஸர்கள் – பாகிஸ்தானுக்கு எதிராக
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.