அமெரிக்காவின் நேட்டோ படையில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்துள்ள நிலையில், இந்தியர்கள் அருகில் உள்ள வெடிகுண்டு முகாம்களில் தங்கிக்கொள்ளுமாறு இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய ஆண்டுகளாக உக்ரைன் எல்லையில் தனது படைகளை குவித்து வந்த ரஷ்யா, இன்று அதிகாலை தனது போரை அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. இந்நிலையில், உக்ரைன் மக்கள் அந்நாட்டின் மேற்கு பகுதிகளுக்கு இடம்பெயர தொடங்கியுள்ளனர். இதனால் அங்கு கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தியாவிலிருந்து கல்வி மற்றும் இதர தேவைகளுக்கு உக்ரைன் சென்றுள்ள இந்தியர்கள் அருகில் உள்ள வெடிகுண்டு முகாம்களில் தங்கிக்கொள்ளுமாறு இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
மாலை 5 மணி நிலவரப்படி ரஷ்யா ராணுவம் நடத்திய தாக்குதலில் சுமார் 40 பேர் வரை உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. மேலும் தாக்குதல் தொடரக்கூடும் என்பதால் அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணி தீவிரமடைந்து வருகிறது.
https://twitter.com/IndiainUkraine/status/1496804668810346503
போர் காரணமாக அந்நாட்டின் வான்வெளி மூடப்பட்டுள்ளதால் விமானம் மூலம் இந்தியர்களை மீட்கும் பணி தோல்வியடைந்துள்ளது என்றும், விமான போக்குவரத்து மீண்டும் தொடங்கியவுடன் மீட்பு பணி துரிதப்படுத்தப்படும் என்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.







