மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் திருவுருவச் சிலைக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 74 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் ஜெயலலிதாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அக்கட்சியினர் மாலை அணித்து மரியாதை செலுத்தினர்.
இதேபோல் சென்னை ராமாபுரம் எம்ஜிஆர் தோட்டத்தில், வைக்கப்பட்டுள்ள மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு சசிகலா மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதையடுத்து பேசிய சசிகலா, அதிமுக கட்சியை மீட்டெடுத்து ஜெயலலிதா ஆசைக்கிணங்க அடுத்த சட்டமன்ற தேர்தலில் ஆட்சி அமைக்கப்படும் என தெரிவித்தார். மேலும், மக்கள் ஆட்சியை மீண்டும் தமிழ்நாட்டில் கொண்டு வருவோம் என உறுதி மொழி ஏற்பதாகவும் சசிகலா கூறினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








