தலைமை பயிற்சியாளர் இல்லாமல் அயர்லாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணி?

சுமார் 8 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணி தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இல்லாமல் அயர்லாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. ஜாஸ்பிரித் பும்ரா தலைமையிலான இந்திய அணி ஆகஸ்ட் 18 முதல் அயர்லாந்து சுற்றுப்பயணம்…

சுமார் 8 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணி தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இல்லாமல் அயர்லாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.

ஜாஸ்பிரித் பும்ரா தலைமையிலான இந்திய அணி ஆகஸ்ட் 18 முதல் அயர்லாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அப்போது 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இந்த போடடிக்கு தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் செல்லப்போவதில்லை என கூறப்படுகிறது.குறைந்த போட்டிகள் மட்டுமே உள்ளதால் தற்போதைய பயிற்சியாளரான ராகுல் டிராவிட் செல்லவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

மாறாக விவிஎஸ் லக்ஷ்மன் மற்ற பயிற்சியாளர்கள் குழுவுடன் பயணிக்க உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2015 இல் இந்தியாவின் அப்போதைய பயிற்சியாளராக இருந்த பிளெட்சர் தனது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து இந்தியா பயிற்சியாளர் இல்லாமல் போட்டிகளை எதிர்கொண்டது. அதேபோல் தற்போது தலைமை பயிற்சியாளர் இல்லாமல் போட்டிகளை எதிர்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

அயர்லாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி விவரம் :   ஜஸ்பிரித் பும்ரா (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ஜிதேஷ் சர்மா, ரவி பிஷ்னோய், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார், அவேஷ் கான், ரின்கு சிங், வாஷிங்டன் சுந்தர், சிவம் துபே, ஷாபாஸ் அகமது, மற்றும் சஞ்சு சாம்சன்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.