ஜெயலலிதா தாக்கப்பட்டதாக கூறிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் -முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்

ஜெயலலிதா தாக்கப்பட்டதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சட்டமன்ற நிகழ்வை திரித்துப் பேசியதாக முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆங்கில நாளேடு ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், ஜெயலலிதா சேலை இழுக்கப்பட்டதாக கூறி, பெண்கள்…

ஜெயலலிதா தாக்கப்பட்டதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சட்டமன்ற நிகழ்வை திரித்துப் பேசியதாக முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆங்கில நாளேடு ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், ஜெயலலிதா சேலை இழுக்கப்பட்டதாக கூறி, பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக நாடாளுமன்றத்தில் திமுகவை தாக்கி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியிருப்பதற்கு பதில் அளித்துள்ளார்.

அதில் நிர்மலா சீதாராமன் ஏதாவது வாட்ஸ் அப் பார்த்துவிட்டு அவ்வாறு பேசியிருப்பார் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். சட்டமன்றத்தில் ஜெயல்லிதாவுக்கு அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என்றும், அது அவராகவே நடத்திக் கொண்ட நாடகம் என்றும் முன்னாள் அமைச்சரும் தற்போதைய காங்கிரஸ் எம்பியுமான திருநாவுக்கரசர் பேசியிருப்பது சட்டமன்ற அவைக்குறிப்பில் உள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்ற நிகழ்வைப் பொய்யாகத் திரித்து நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் பேசியது வருந்தத்தக்கது என்றும் ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.