முக்கியச் செய்திகள் விளையாட்டு

கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு கொரோனா

இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இங்கிலாந்து அணிக்கு எதிராக ஜூலை 1ம் தேதி பிம்பிங்ஹாமில் தொடங்க இருந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாட அஸ்வின் தேர்வாகியிருந்தார். இங்கிலாந்துக்கு கடந்த 16ம் தேதி இந்திய கிரிக்கெட் அணி புறப்பட்டுச் சென்றது. அஸ்வினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவர் இங்கிலாந்துக்குச் செல்ல முடியவில்லை.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தற்போது அவர் தன்னைதானே தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார். தேவையான அனைத்து நெறிமுறைகளையும் முடித்த பிறகு அஸ்வின் அணியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து பிசிசிஐ வட்டாரங்கள் கூறியதாவது:
இங்கிலாந்துக்குக்கு புறப்படுவதற்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் அஸ்வினுக்கு பாசிட்டிவ் என்று வந்ததால், அவர் மற்ற வீரர்களுடன் விமானத்தில் பயணம் செல்லவில்லை. டெஸ்ட் ஆட்டம் முடிவதற்கு முன்பே அவர் முழு உடல் தகுதி பெற்று அணியில் சேர்வார் என்று நம்புகிறோம். வரும் 24ம் தேதி லெய்செஸ்டர்ஷயர் கிளப் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் அவரால் பங்கேற்க முடியாது என்று அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இங்கிலாந்து-இந்தியாவுக்கு இடையிலான 5 டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் இன்னும் முடிவடையால் நிலுவையில் உள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற இந்த டெஸ்ட் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், 5ஆவது டெஸ்ட் ஆட்டம் ஜூலை 1ம் தேதி நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து இரு அணிகளும் 3 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரிலும், 3 ஒரு நாள் ஆட்டங்கள் கொண்ட தொடரிலும் இந்த சுற்றுப் பயணத்தில் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

-மணிகண்டன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

குழந்தைகளிடம் கோவாக்சின் பரிசோதனை: மத்திய அரசு அனுமதி

Halley Karthik

குப்பைகளை சாலைகளில் போடுவது மண்ணுக்கு செய்யும் அநீதி: அமைச்சர் மெய்யநாதன்

Ezhilarasan

ஆகஸ்ட் 15ல் கொடி ஏற்றும்போது கொரோனா இறக்கப்பட்டிருக்க வேண்டும்: தமிழிசை

Gayathri Venkatesan