கவுந்தப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்த விவகாரம் குறித்த விசாரணையில், தலைமை மருத்துவர் தினகர், உதவி மருத்துவர் சண்முகவடிவு ஆகியோரை தற்காலிகப் பணிநீக்கம் செய்து மருத்துவத் துறை இயக்குனர் உத்தவிட்டுள்ளார்.
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கவுந்தப்பாடி அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவராகப் பணியாற்றி வருபவர் தினகர். இவர் மருத்துவம் படித்து விட்டு ஹவுஸ் சர்ஜனாக உள்ள அவரது மகன் அஸ்வினை கவுந்தப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி காலை முதல் இரவு வரை காய்ச்சல் முதல் இதய நோயாளிகள் வரை சிகிச்சை அளிக்க வைத்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதுகுறித்த செய்தி வெளியானதைத் தொடர்ந்து இன்று ஈரோடு மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் கோமதியை நேரில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் உண்ணி உத்தரவிட்டார். இதையொட்டி, இன்று மதியம் கவுந்தப்பாடி அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று,
தலைமை மருத்துவர் தினகர் உட்பட செவிலியர்கள் உள்ளிட்ட அனைவரிடமும் 4 மணி நேரம் விசாரணை நடத்தினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய இணை இயக்குநர் கோமதி, அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் தினகரன், அவரது மகனை சிகிச்சை அளிக்க வைத்தது உறுதி செய்யப்பட்டது. இந்த விசாரணை அறிக்கையை மாநில மருத்துவப் பணிகள்
இயக்குநருக்கு அனுப்பி துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இந்நிலையில், தற்போது இணை இயக்குனர் கோமதி அளித்த அறிக்கை
குறித்து ஆய்வு செய்யப்பட்டு மருத்துவ அலுவலர் தினகர் மற்றும் உதவி
மருத்துவர் சண்முகவடிவு ஆகிய இருவரையும் தற்காலிகப் பணிநீக்கம் செய்து உத்தர
விடப்பட்டுள்ளது.
-ம.பவித்ரா