ஒலிம்பிக் போட்டி முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள் வணிகம்

இந்திய வங்கிகள் வலுவாக உள்ளது – ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ்

இந்திய வங்கித்துறை வலுவாக உள்ளது என்றும் ,அமெரிக்க வங்கிகள் திவாலால் இந்திய வங்கிகளுக்கும், நாட்டின் பொருளாதாரத்திற்கும் பாதிப்பைல்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளார்.

ஃபெடரல் வங்கி நடத்திய கருத்தரங்கில் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் ,இந்திய அரசின் வெளிநாட்டுக்கடன் அளவு கட்டுக்குள் உள்ளது. சர்வதேச அமைப்புகள் வரையறுத்துள்ள அளவுகோளின் படியே இந்தியாவின் கடன் அளவு உள்ளது என்றார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மேலும் அவர் உரையில், 2022 ஆம் ஆண்டில் அமெரிக்க டாலர் மதிப்பு அதிகரிப்பு, தொடர்ச்சியாக உலக நாடுகளீன் மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தை உயர்த்தியதால், பல நாடுகளின் பொருளாதாரம் ஆட்டம் கண்டது.

அந்நாடுகளீன் வெளிநாட்டு கடன் நிர்ணயிக்கப்பட்ட அளவையும் தாண்டி சென்றது. தற்போது 25 சதவீத வளரும் நாடுகளின் பொருளாதார நிலை நெருக்கடியில் உள்ளது . குறைந்த வருவாய் கொண்ட நாடுகளில் 15 சதவீதமும், ஒட்டுமொத்தமாக 45 சதவீத நாடுகள் வெளிநாட்டு கடன் விகித அளவில் நெருக்கடியை சந்தித்து வருகின்றன என்று கூறிய சக்தி காந்த தாஸ். இந்தியாவில் வங்கி துறையும், பொருளாதாரமும் வலுவாக உள்ளது என்றார்.

அமெரிக்க வங்கிகள் திவாலால் இந்திய பொருளாதாரத்திற்கு பாதிப்பு இல்லை
45 % நாடுகள் அதிக வெளிநாட்டுக்கடனை பெற்றுள்ளன. அதிகரித்த வட்டி விகித உயர்வு பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இந்திய தேர்தல்களில் இஸ்ரேல் குழு தலையீடு? சர்ச்சையைக் கிளப்பும் டீம் ஜார்ஜ் விவகாரம்

Jayasheeba

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் யாருக்கும் முதல் மரியாதை வழங்கக் கூடாது: நீதிமன்றம் உத்தரவு!

Nandhakumar

‘நடிகை கவுதமியின் வங்கி கணக்குகளின் முடக்கத்தை நீக்கலாம்’ – சென்னை உயர்நீதிமன்றம்

Arivazhagan Chinnasamy