கார்கள் விற்பனையில் இந்திய வாகன சந்தை கடந்த மாதம் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு புதிய உச்சம் தொட்டது.
இந்தியாவில் பெரும்பாலும் எஸ்யூவி வகை அல்லது குறைந்தபட்சம் எஸ்யூவி தரத்தில் இருக்கும் கார்கள் தற்போது மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளன. இதனால் பல முன்னணி கார் நிறுவனங்கள் தங்கள் கார்களை மேம்படுத்த தொடங்கியுள்ளன. இதன்படி டாடா நெக்ஸான், மாருதி சுசுகி பிரீசா, ஹூண்டாய் வென்யூ மற்றும் கியா சோனெட் போன்ற கார்கள் முன்பை விட சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டு வருகின்றன.
கடந்த ஏப்ரல் 1 முதல் வாகன உற்பத்திக்கான புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்தன. அதன்படி BS 6 மாசு உமிழ்வு விதிமுறைகள் மாற்றப்பட்டன. இதனால் பருவநிலையில் நல்ல முன்னேற்றம் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் சங்கத்தின் தரவுகளின் அடிப்படையில் 2018 ஆம் ஆண்டில் ஒட்டுமொத்தமாக 2.98 லட்சம் கார்கள் விற்கப்பட்டிருந்தது. 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் விற்பனை 2.93 லட்சமாக இருந்தது. ஆனால் கடந்த ஏப்ரல் மாதத்தில் சுமார் 3.31 லட்சம் பயணிகள் வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. இது இந்திய வாகனச் சந்தையின் வளர்ச்சியை காட்டுகிறது.
புதிய மற்றும் புதுப்பிக்கப்பட்ட கார் மாடல்களின் தொடர்ச்சியான வெளியீடு இந்த விற்பனை உச்சத்திற்கு காரணம்.







