ஹெலிகாப்டர் உதிரி பாகங்கள்; ராணுவத்தினர் ஆய்வு

குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்திலிருந்து எடை அதிகமான என்ஜின் உள்ளிட்ட பொருட்களை ஹெலிகாப்டர் மூலம் எடுத்து செல்வது பற்றி ராணுவத்தினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். குன்னூர் அருகே நஞ்சப்பசத்திரம் வனப் பகுதியில் கடந்த…

குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்திலிருந்து எடை அதிகமான என்ஜின் உள்ளிட்ட பொருட்களை ஹெலிகாப்டர் மூலம் எடுத்து செல்வது பற்றி ராணுவத்தினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

குன்னூர் அருகே நஞ்சப்பசத்திரம் வனப் பகுதியில் கடந்த 8ம் தேதி இந்திய ராணுவ ஹெலிகாப்டர் மரத்தின் மீது மோதி ஏற்பட்ட விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த முன்னாள் முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவருடைய மனைவி உட்பட 14 ராணுவ அதிகாரிகள் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து, விபத்து ஏற்பட்ட சம்பவ இடத்திலிருந்து ராணுவ ஹெலிகாப்டரின் சேகரிக்கப்பட்ட பாகங்களை தடயவியல் ஆய்விற்காகக் கோவை சூலூர் விமானப்படைத் தளத்திற்கு விமானப் படை அதிகாரிகள் எடுத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

ஏற்கனவே கடந்த வாரம் ஹெலிகாப்டரின் இறக்கை பகுதி மற்றும் பெட்ரோல் டேங்க் பகுதிகள் எடுத்துச் செல்லப்பட்டது. சாலையிலிருந்து 200 மீட்டர் தொலைவில் வனப்பகுதியில் ஹெலிகாப்டர் விழுந்து கிடப்பதால் உடைந்து சிதறிய என்ஜின் உள்ளிட்ட பெரிய பாகங்களை அங்கிருந்து கடத்தி முக்கிய சாலைக்குக் கொண்டு வருவதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது. இந்நிலையில் வனப் பகுதியிலிருந்து மற்றொரு ஹெலிகாப்டர் உதவியுடன் உடைந்து கிடக்கும் பெரிய பாகங்களை மட்டும் எடுத்து வருவதற்குண்டான சாத்திய கூறுகள் குறித்து ராணுவ தரப்பில் ஆலோசித்து மற்றொரு ஹெலிகாப்டர் உதவியுடன் அதிக பாரம் உள்ள பொருட்களை எடுத்துச் செல்ல ராணுவத்தினர் அப்பகுதியில் ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு மேற்கொண்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.