முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

ராணுவ விமானப் பிரிவில் விரைவில் பெண் விமானிகள்; ராணுவத்தலைமை தளபதி நரவானே தகவல்!

ராணுவ விமானப்பிரிவில் எல்லை ரோந்து உள்ளிட்ட பணிகளில் ஹெலிகாப்டர்களை இயக்க விரைவில் பெண் விமானிகள் ஈடுபடுத்தப்படுவார்கள் என ராணுவ தலைமைத் தளபது மனோஜ் முகுந்த் நரவானே தெரிவித்துள்ளார்.

இந்திய பாதுகாப்புத்துறையில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் வாய்ப்புகள் அதிக அளவில் வழங்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே இந்திய விமானப்படையில் போர் விமானிகளாகவும் போர் கப்பல்களில் ஆயுதப் பிரிவிலும் பெண்கள் நியமிக்கப்படுள்ளனர். இந்திய ராணுவத்தை பொறுத்தவரை பெண்கள் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் களப் பணிகளில் மட்டும் பெண்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் ராணுவ விமானப்பிரிவில் எல்லை ரோந்து உள்ளிட்ட பணிகளில் ஹெலிகாப்டர்களை இயக்க விரைவில் பெண் விமானிகள் ஈடுபடுத்தப்படுவார்கள் என ராணுவ தலைமைத் தளபது மனோஜ் முகுந்த் நரவானே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த மாதம், பெண் அதிகாரிகளை இராணுவ விமானப் போக்குவரத்துக்கு பயன்படுத்த முடிவு செய்தோம், அதன்படி பெண் அதிகாரிகளுக்கான விமானம் ஓட்டும் பயிற்சி, வரும் ஜூலையில் துவங்க உள்ளது. ஒரு ஆண்டு பயிற்சிக்கு பின், ராணுவத்தில் பெண் விமானிகள் பணி செய்யத் துவங்குவர்கள் என தெரிவித்தார்.

இந்திய விமானப்படையில் ஏற்கனவே 10 பெண்கள் போர் விமானிகள் உள்ளனர், அதே நேரத்தில் இந்திய கடற்படையில் டோர்னியர் விமானத்தை இயக்கவும் பெண்கள் உள்ளனர், 10 போர் விமானிகளைத் தவிர, போக்குவரத்து விமானங்கள் மற்றும் சாஃப்பர் விமானங்களை இயக்கும் 111 பெண் விமானிகளை இந்திய விமானப்படை (ஐ.ஏ.எஃப்) கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பிகார் முதலமைச்சரை சந்தித்த தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ்

Web Editor

பாலியல் வன்முறை; போக்சோவில் வாலிபர் கைது

G SaravanaKumar

ஸ்ரீபெரும்புதூரில் என்கவுன்டர்; கொள்ளையர்கள் சிக்கியது எப்படி?

G SaravanaKumar

Leave a Reply