இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள ‘இந்தியன் 2’ – மாஸ் அப்டேட் கொடுத்த இயக்குநர் ஷங்கர்!

இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள ‘இந்தியன் 2’ படத்தை  குறித்து இயக்குநர் ஷங்கர் ஒரு புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.  இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துவந்த இந்தியன் 2 படம் விபத்து உள்ளிட்ட காரணங்களால் பாதியில் நின்றது. கமலின் ‘விக்ரம்’ மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதால் தற்போது…

இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள ‘இந்தியன் 2’ படத்தை  குறித்து இயக்குநர் ஷங்கர் ஒரு புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளார். 

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துவந்த இந்தியன் 2 படம் விபத்து உள்ளிட்ட காரணங்களால் பாதியில் நின்றது. கமலின் ‘விக்ரம்’ மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதால் தற்போது ‘இந்தியன் 2’ படத்தை மீண்டும் தொடங்கியுள்ளனர்.

சங்கர் ஒரே நேரத்தில் இந்தியன் 2 மற்றும் ராம் சரண் நடிப்பில் உருவாகும் Game Changer படத்தை இயக்கி வருகின்றார். இந்நிலையில் இந்தியன் 2 படப்பிடிப்பு புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி படத்தின் மீதான ஆவலைத் தூண்டி வருகிறது.

இந்தியன் 2 படப்பிடிப்பு Taipei நாட்டில் நடந்து வந்ததை அடுத்து,  தென்னாப்பிரிக்கா நாட்டில் ஒரு சண்டைக்காட்சி படமாக்கப்பட்டு வந்தது. அதை தொடந்ந்து தென் ஆப்பிரிக்கா நாட்டில் நடந்து வந்த அந்த படப்பிடிப்பும் முடிந்ததாக படத்தின் இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், படத்தின் கிளைமாக்ஸ் ஷூட்டிங் சென்னையில் விருவிருப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில்  படப்பிடிப்பு தலத்தில் இயக்குநர் ஷங்கர் மற்றும் இசையமைப்பாளர் அனிருத்  இருவரும் இணைந்து படத்திற்கான இசையை உருவாக்கிவரும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.