”எல்லையில் சீனா படைகளை குறைத்தால், இந்தியாவும் குறைக்கும்”- ராஜ்நாத் சிங்!

எல்லையில் சீனா, தனது படைகளை குறைத்தால் மட்டுமே இந்தியாவும் படைகளைக் குறைக்கும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களாகவே இந்தியா- சீனா இடையே எல்லைப் பிரச்னை இருந்து வருகிறது.…

எல்லையில் சீனா, தனது படைகளை குறைத்தால் மட்டுமே இந்தியாவும் படைகளைக் குறைக்கும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாகவே இந்தியா- சீனா இடையே எல்லைப் பிரச்னை இருந்து வருகிறது. சீன ராணுவம் அவ்வப்போது எல்லை தாண்டி தாக்குதலில் ஈடுபடுவதாக தகவல் வெளியாகி வருகிறது. இரு நாடுகள் இடையே தொடர் பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையிலும், சுமூகமான முடிவு ஏதும் எட்டப்படவில்லை. சீனாவின் நடவடிக்கையை பொறுத்து இந்தியாவும் பதிலடி கொடுக்கும் என மத்திய அரசு ஏற்கனவே தெரிவித்தது.

இந்நிலையில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஆங்கில தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், சீனாவின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் , இந்திய எல்லையில் கட்டமைப்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருவதாக கூறினார். எல்லையில் உள்ள பாதுகாப்பு படையினர் மற்றும் எல்லையோரத்தில் உள்ள கிராமத்தினரின் தேவைகளுக்காகவே கட்டமைப்புகள் மேற்கொள்ளப்படுவதாகவும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். சீனா உடனான எல்லைப் பிரச்னை எப்போது முடிவுக்கு வரும் என்பதை உறுதியாக சொல்ல முடியாது என்று தெரிவித்த ராஜ்நாத் சிங், பேச்சுவார்த்தையின் வாயிலாக தீர்வு காண முடியும் என்று இந்தியா நம்புவதாக குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply