தமிழகம் செய்திகள்

ஆதிச்சநல்லூரில் விரைவில் அருக்காட்சியகம் – மத்திய அரசு தகவல்

ஆதிச்சநல்லூரில் விரைவில் அருக்காட்சியகம் அமைக்கப்படும் என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

“ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம்” அமைக்கும் பணியின் நிலை குறித்தும், இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் கண்டறியப்பட்ட தொல்பொருட்களில் தமிழ் மொழியின் ஆதிக்கம் அதிகம் இருப்பதால், டிஜிட்டல் கல்வெட்டு அருங்காட்சியகம் தமிழகத்தின் கீழடியில் அமைக்க மத்திய அரசிடம் ஏதேனும் திட்டம் உள்ளதா? என தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, ஓ.பி.ரவீந்திரநாத் குமார் ஆகியோர் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதையும் படிக்க: 50க்கும் மேற்பட்ட நாய்களுக்கு விஷம் வைத்து கொலை..! காவல்துறை தீவிர விசாரணை

இதற்கு பதிலளித்துள்ள மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டி, தமிழகத்தின் ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்க தமிழ்நாடு அரசு 5.25 ஏக்கர் நிலத்தை இந்திய தொல்லியல் துறைக்கு வழங்கியுள்ளதாகவும், அருங்காட்சியத்தை கட்டுவதற்கு சிறந்த கட்டிடக்கலை நிறுவனத்தை தேர்வு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகப் பணிகள் மிக வேகமாக முடிக்கக்கூடிய வகையில் திட்டமிடல் செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

டிஜிட்டல் கல்வெட்டு அருங்காட்சியகம் அமைப்பது தொடர்பான கேள்விக்கு, விலைமதிப்பற்ற கல்வெட்டுகளை ஒரே தளத்தின் மூலம் தெரிந்து கொள்வதற்காக டிஜிட்டல் கல்வெட்டு அருங்காட்சியகம் ஒன்றை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக எழுத்துப்பூர்வ பதில் தெரிவித்துள்ளார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

புதுக்கோட்டை தேர் விபத்து தொடர்பாக 2 பேர் கைது

G SaravanaKumar

1990 முதல் அரியர் வைத்துள்ளவர்களுக்கு இறுதி வாய்ப்பு!

Halley Karthik

இந்தி திணிப்பு திட்டமிட்டு நடக்கும் அரசியல் – சீமான் ஆவேசம்

EZHILARASAN D