இலங்கைக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில், இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்திய அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர்ந்து நேற்று இமாச்சலபிரதேச மாநிலம் தரம்சாலா மைதானத்தில் 2வது டி20 போட்டி நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பேட் செய்த இலங்கை அணி தொடக்க வீரர்கள் பதும் நிசாங்கா மற்றும் குணதிலகா நல்ல துவக்கத்தை கொடுத்தனர.
குணதிலகா 38 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த, அசலங்கா, கமில் மிஷாரா மற்றும் சண்டிமால் ரன்கள் ஆகியோர் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். இறுதியில் கேப்டன் சணகா அதிரடியில் இலங்கை அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்தது.
184 ரன்கள் இலக்கை 2 வது ஆக களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் ரோகித் மற்றும் இஷான் கிஷான் பெரிதும் ஜொலிக்கமால் வெறியேற, தொடர்ந்து வந்த ஸ்ரேயஸ் அய்யரும், சஞ்சு சாம்சனும், அணியின் ஸ்கோரை சீரான வேகத்தில் உயர்த்தினர்.
சஞ்சு சாம்சன் தொடக்கத்தில் பொறுமை காட்டினாலும், பின்னர் அதிரடி காட்டினார். இருவரின் அதிரடி ஆட்டத்தில் இலக்கை நோக்கி பயணித்தது இந்திய அணி. சஞ்சு சாம்சன் 39 ரன்களில் வெளியேற அடுத்து வந்த ஜடேஜா இலங்கையின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்து 18 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார்.
இறுதியில், இந்திய அணி 17.1 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்களை எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனையடுத்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா வென்றது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.