முக்கியச் செய்திகள் செய்திகள் விளையாட்டு

பெண்கள் கிரிக்கெட்: இந்திய அணி சிறப்பான தொடக்கம்!

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி, முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்புக்கு 396 ரன்கள் எடுத்துள்ளது.

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டி (4 நாள் ஆட்டம்) பிரிஸ்டலில் உள்ள கவுண்டி மைதானத்தில் நடந்து வருகிறது.

ஹீதர் நைட் தலைமையிலான இங்கிலாந்து அணி, முதலில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி அந்த அணி முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்புக்கு 396 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ஹீதர் நைட் 95 ரன்களும் ஷோபியா டன்கிளே 74 ரன்களும் எடுத்தனர்.

இந்திய அணி தரப்பில், சினேஹ் ராணா, 4 விக்கெட்டுகளும் தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளும் பூஜா, ஜூலன் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

பின்னர் முதல் இன்னின்ஸை தொடங்கிய இந்திய பெண்கள் அணியில் ஸ்மிருதி மந்தனாவும் ஷெஃபாலி வர்மாவும் நிதானமாக ஆடி வருகின்றனர். 31 ஓவர் முடிவில் இந்திய பெண்கள் அணி, விக்கெட் இழப்பின்றி 112 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்மிருதி 51 ரன்களுடனும் ஷெஃபாலி 56 ரன்களுடனும் ஆடி வருகின்றனர்.

Advertisement:

Related posts

உலக நாடுகள் பருவநிலை அவசரநிலையை அறிவிக்குமாறு ஐ.நா வலியுறுத்தல்!

Jayapriya

15 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

Ezhilarasan

திமுக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகும்?

Saravana Kumar