இந்தியா தென்ஆப்பிரிக்கா மோதும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: இன்று தொடக்கம்

இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது. தென்னாப்ரிக்க அணியின் கோட்டையாக கருதப்படும் சென்ச்சூரியன் மைதானத்தில் வரலாற்று வெற்றியை பதிவு செய்த உற்சாகத்தில் இந்திய அணி உள்ளது.…

இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது.

தென்னாப்ரிக்க அணியின் கோட்டையாக கருதப்படும் சென்ச்சூரியன் மைதானத்தில் வரலாற்று வெற்றியை பதிவு செய்த உற்சாகத்தில் இந்திய அணி உள்ளது. இந்நிலையில், இரண்டாது டெஸ்ட் போட்டியையும் வென்று தென்னாப்ரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றதில்லை என்ற வரலாற்றை மாற்றி எழுதும் முனைப்பில் இந்திய அணி பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.

ஜோஹனஸ்பெர்க் மைதானத்தில் இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இந்தியாவைப் பொறுத்தவரையில் விராட் கோலி தலைமையில் முதல் டெஸ்ட்டில் களமிறங்கிய வீரர்களே இரண்டாவது டெஸ்ட்டிலும் விளையாடுவார்கள் என கூறப்படுகிறது. இந்நிலையில், சொந்த மண்ணில் தொடர் இழப்பை தவிர்க்க தென்னாப்ரிக்க அணி தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.