புதுக்கோட்டை அருகே துப்பாக்கி குண்டு பாய்ந்து சிகிச்சை பெற்று வரும் சிறுவனை, அமைச்சர் மெய்யநாதன் நேரில் சந்தித்து பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினார்.
புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தமலை பகுதியில், கடந்த 30-ஆம் தேதி மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் துப்பாக்கி பயிற்சியின் போது, சிறுவன் தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. இதனையடுத்து தஞ்சை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் துப்பாக்கி குண்டு அகற்றப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சிறுவன் புகழேந்தியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக வெளியான தகவலையடுத்து விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் நேரில் சென்று சிறுவனை சந்தித்தார். தொடர்ந்து பெற்றோர்களுக்கு ஆறுதல் தெரிவித்து அரசின் நிதி வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிறுவன் புகழேந்தி தற்போது நலமுடன் உள்ளதாகவும், உயர்தர சிகிச்சை தேவையெனில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறினார்.