இந்தியா – ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டி: விரைவில் டிக்கெட் விற்பனை

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான டிக்கெட் விற்பனை மார்ச் 13 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட்…

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான டிக்கெட் விற்பனை மார்ச் 13 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் மார்ச் 22ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த போட்டியைக் காண டிக்கெட் விற்பனைக்கான துவக்க தேதியை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் வெளியிட்டுள்ளது.

இதையும் படிக்க: புடவையுடன் 30 நாடுகளுக்கு பைக் ரைட் செல்லும் பெண்

மார்ச் 13 ஆம் தேதி முதல் இந்தியா, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைன் மூலமாக தொடங்கப்பட உள்ளது. PAYTM செயலி மற்றும் http://www.insider.in என்ற வலைதள பக்கத்தில் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படவுள்ளன.

18 ஆம் தேதி காலை 11 மணி முதல் சென்னை சேப்பாக்கம் எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் நேரடியாக டிக்கெட் விற்பனை தொடங்கப்பட உள்ளது. போட்டியைக் காண வரும் பார்வையாளர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் விதித்துள்ளது. டிக்கெட் விலை குறைந்தபட்சம் 1,200 முதல் அதிகபட்சம் 10,000 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.