உலக அளவில் பால் உற்பத்தியில் இந்தியா முதலிடம்! ; அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா

உலக அளவில் பால் உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக மக்களவையில் மத்திய அமைச்சர் பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா தெரிவித்துள்ளார். நாட்டில் பால் உற்பத்தி அதிகரித்துள்ளதா? என மக்களவையில் உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார்.…

உலக அளவில் பால் உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக மக்களவையில் மத்திய அமைச்சர் பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா தெரிவித்துள்ளார்.

நாட்டில் பால் உற்பத்தி அதிகரித்துள்ளதா? என மக்களவையில் உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்குப் பதிலளித்த மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா, 2020-2021ஆம் ஆண்டில் நாட்டில் 210 மில்லியன் டன் பால் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாகவும் உலக அளவில் பால் உற்பத்தியில் இந்தியா முதல் இடத்தில் உள்ளதாகவும் கூறினார்.

மேலும் , பால் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் மத்திய அரசு “ராஷ்டிரிய கோகுல் திட்டத்தை” செயல்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார். பால் பதப்படுத்துதல் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி,பால் கூட்டுறவு மற்றும் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை ஆதரித்தல் உள்ளிட்ட பல்வேறு உதவித் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

கடந்த 2018-2019ம் ஆண்டில் 6.47% வளர்ச்சியுடன் 187.7 மில்லியன் டன் பால் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், அவை அதிகரித்து 2019-2020ம் ஆண்டில் 198.4 மில்லியன் டன்னாக உற்பத்தி அதிகரித்தது இதேபோல் 2020-2021ம் ஆண்டில் 210.0 மில்லியன் டன் பால் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை, 2018-2019ம் ஆண்டில் 8361.68 டன், 2019-2020ல் 8759.01 டன், 2020-2021ம் ஆண்டு 9790.36 டன் பால் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.