சென்னை ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகரில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் தமிழ்நாடு அரசின் நடவடிக்கையில் தவறில்லை எனச் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகரில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் தமிழ்நாடு அரசின் நடவடிக்கையில் தவறில்லை எனச் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை ஈஞ்சம்பாக்கம் பகுதியில் உள்ள பெத்தேல் நகரில் ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்றுவது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கும், பெத்தேல் நகர் குடியிருப்போர் பாதுகாப்பு நலசங்கம் மற்றும் குடியிருப்பு வாசிகள் தொடர்ந்த வழக்குகளும் சென்னை பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மாவட்ட ஆட்சியர் பரிந்துரை மட்டுமே செய்ய முடியும் எனவும், அந்த நிலத்தின் தன்மையை வகைமாற்றம் செய்ய நில நிர்வாக ஆணையருக்குத்தான் அதிகாரம் உள்ளதாகவும் விளக்கம் அளித்தனர். அதன்படி ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகரில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் அரசின் நடவடிக்கையில் தவறில்லை எனவும் கூறிய நீதிபதிகள் என்று கூறினர்.
அப்போது பெத்தேல் நகர் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்துவருவதாக அரசு சார்பில் தெரிவித்தபோது, நீதிபதிகள் குறுக்கிட்டு தற்போது ஆக்கிரமிப்புகளை அகற்றும் அரசு, இத்தனை ஆண்டுகளாக ஏன் அனுமதித்தது என்றும் கேள்வி எழுப்பி வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்குத் தள்ளிவைத்தனர்.







