இந்தியா; இன்றைய கொரோனா பாதிப்பு

நாட்டில் புதியதாக 7 ஆயிரத்து 350 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 91 ஆயிரத்து 456 பேர் சிகிச்சை பெற்று…

நாட்டில் புதியதாக 7 ஆயிரத்து 350 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 91 ஆயிரத்து 456 பேர் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், புதிதாக 7 ஆயிரத்து 350 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரே நாளில் 202 பேர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 4 லட்சத்து 75 ஆயிரத்து 636 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 7 ஆயிரத்து 973 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாடு முழுவதும் இதுவரை 133 கோடியே 17 லட்சம் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில், 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில், மும்பை கடற்கரையில் பொதுமக்கள் ஏராளமானோர் திரண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அம்மாநிலத்தில் தற்போது, ஒமிக்ரான் வகை தொற்று பரவல் தொடங்கியுள்ளது. இதுவரை அம்மாநிலத்தில், 17 பேர் ஒமிக்ரான் வகை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனை கட்டுபடுத்துவதற்காக, அம்மாநிலத்தில் நேற்றும் இன்றும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில், விடுமுறை தினமான நேற்று, மும்பை, கிர்காம் சௌபட்டி கடற்கரையில், பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டனர். தொற்று பரவலை தடுப்பதற்காக, 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மும்பை கடற்கரையில் பொதுமக்கள் திரண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.