முக்கியச் செய்திகள் இந்தியா

மிஸ் யுனிவர்ஸ் 2021: யார் இந்த ஹர்னாஸ் சாந்து?

மிஸ் யுனிவர்ஸ் 2021′ படத்தை வென்றுள்ள பஞ்சாப்பின் ஹர்னாஸ் சாந்து 2 படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.

மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டி ஒவ்வொரு வருடமும் நடந்து வருகிறது. இந்தாண்டுக்கான போட்டி, இஸ்ரேலில் உள்ள எய்லாட் நகரில் நடந்தது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 80 அழகிகள் பங்கேற்றனர். இதில் ஹர்னாஸ் சாந்து மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றார். அவருக்கு, முன்னாள் மிஸ் யுனிவர்ஸான மெக்சிகோவை சேர்ந்த முன்னாள் பிரபஞ்ச அழகி, ஆண்ட்ரியா மெசாவால், மகுடம் சூட்டினார்.

இந்தியா சார்பில், சுஷ்மிதா சென் 1994 ஆம் ஆண்டும், லாரா தத்தா 2000-ம் ஆண்டும் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றிருந்தனர். 20 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது, இந்தியப் பெண் ஹர்னாஸ் சாந்து மிஸ் யுனிவர்சாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற ஹர்னாஸ் சாந்து சண்டிகரை சேர்ந்தவர். பிரபல மாடலான இவர், கடந்த 2017-ம் ஆண்டு மிஸ் சண்டிகராக தேர்வு செய்யப்பட்டவர். பல்வேறு அழகிப் போட்டிகளில் பங்கேற்று பட்டங்களை வென்றிருக்கிறார்.

மிஸ் திவா பட்டத்தை 2021 ஆம் ஆண்டும் மிஸ் இந்தியா பஞ்சாப் பட்டத்தை 2019 ஆம் ஆண்டும் பெற்ற ஹர்னாஸ், யாரா தியான் பூ பரன் (Yaara Diyan Poo Baran) மற்றும் பாய் ஜி குட்டாங்கே ( Bai Ji Kuttange) ஆகிய பஞ்சாபி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

பொது நிர்வாகவியல் துறையில் முதுகலை படித்துவரும் ஹர்னாஸுக்கு இன்ஸ்டாவில் ஏராளமானோர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement:
SHARE

Related posts

கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்கக் கூடாது: சபாநாயகர் அப்பாவு

Ezhilarasan

கடைசிநாள் படப்பிடிப்பில் ’ஜேம்ஸ்பாண்ட்’ கண்ணீர்

Ezhilarasan

2021-22 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் ஒரு ரூபாய்க்கான வரவு – செலவுகள்

Jeba Arul Robinson