2027-ல் உலகின் 3வது பொருளாதார வல்லரசாக இந்தியா உருவாகும் – பிரபல முதலீட்டு நிறுவனம்அறிக்கை

அடுத்த 3 ஆண்டுக்குள் உலகின் 3- வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா முன்னேறும் என்று உலகின் முன்னணி முதலீட்டு நிறுவனமான கோல்ட்மேன் சாச்ஸின் தெரிவித்துள்ளது.  2027ஆம் ஆண்டுக்குள் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக…

அடுத்த 3 ஆண்டுக்குள் உலகின் 3- வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா முன்னேறும் என்று உலகின் முன்னணி முதலீட்டு நிறுவனமான கோல்ட்மேன் சாச்ஸின் தெரிவித்துள்ளது. 

2027ஆம் ஆண்டுக்குள் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா முன்னேறும் என்று கணித்து கோல்ட்மேன் சாக்ஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது. கோல்ட்மேன் சாச்ஸின் அறிக்கையில் 2027ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் வசதி படைத்த வர்க்கம் 10 கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், பிரீமியம் பொருட்களை விற்கும் உள்நாட்டு நிறுவனங்கள் சிறப்பாக செயல்படும் என்று கூறியது. ஜப்பான், ஜெர்மனி, அமெரிக்காவைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா முன்னேறும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்போது இந்தியா உலகின் 5வது பெரிய பொருளாதாரமாக இருக்கின்றது.

இதையும் படியுங்கள் : நெல்லை மழை வெள்ள பாதிப்பு – “தமிழ்நாடு அரசின் பணிகள் சிறப்பாக உள்ளது” மத்தியகுழு பாராட்டு!

கோல்ட்மேன் அறிக்கையின்படி, வலுவான பொருளாதார வளர்ச்சி, நிலையான பணவியல் கொள்கை மற்றும் அதிக கடன் வளர்ச்சி காரணமாக கடந்த பத்தாண்டுகளில்  இந்தியர்கள் அதிக வருமானம் ஈட்டும் திறன் அதிகரித்துள்ளது. இதன் விளைவாக, ஆண்டுக்கு  ₹8.28 லட்சத்துக்கு மேல் சம்பாதிக்கும் வசதி படைத்த இந்தியர்களின் எண்ணிக்கை 2015-ல் 24 மில்லியனில் இருந்து தற்போது 60 மில்லியனாக உயர்ந்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின்படி, தற்போது உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உள்ள இந்தியா, 2027 ஆம் ஆண்டில் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் என தெரிவிக்கபட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.