ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 3 ஒரு நாள் கிரிக்கெட் தொடர் விரைவில் நடைபெறவுள்ளது.
இந்தத் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. 15 வீரர்களின் பெயர் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒரு நாள் தொடரை ஷிகர் தவன் தலைமையிலான இந்திய அணி கைப்பற்றி அசத்தியது. 5 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் தற்போது வெஸ்ட் இண்டீஸில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடி வருகிறது.
முதலாவது டி20 ஆட்டத்திலும் இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. டி20 தொடருக்கு ரோஹித் சர்மா கேப்டன்ஷிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
ஆகஸ்ட் 1ம் தேதி வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2வது டி20 ஆட்டம் நடைபெறவுள்ளது.
இந்தப் போட்டித் தொடர் முடிந்தவுடன், ஜிம்பாப்வேவுக்கு இந்திய அணி சுற்றுப் பயணம் செல்கிறது.
ஆகஸ்ட் 18ம் தேதி முதல் ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டம் நடைபெறவுள்ளது. அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 20 மற்றும் ஆகஸ்ட் 22 ஆகிய தேதிகளில் அடுத்தடுத்த ஒரு நாள் ஆட்டம் நடைபெறுகிறது.
இந்நிலையில், அந்த தொடரில் பங்கேற்கவுள்ள இந்திய அணியை ஷிகர் தவன் வழிநடத்துவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கேப்டனாக ஷிகர் தவனும், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் ஆகியோர் விக்கெட் கீப்பராகவும் செயல்படுவார்கள் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.
ருதுராஜ் கெய்க்வாட், சுபமான் கில், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்குர், குல்தீப் யாதவ், அக்சர் படேல், அவேஷ் கான், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ், தீபக் சஹர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
காயம் காரணமாக விளையாடமல் இருந்துவந்த தீபக் சஹர் மீண்டும் அணியில் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.








