44வது செஸ் ஒலிம்பியாட்; முதல் சுற்று அட்டவணை வெளியீடு!

44வது செஸ் ஒலிம்பியாட் தொடரின் முதல் சுற்றுப் போட்டிகள் இன்று மாலை 3 மணிக்குத் துவங்கவுள்ளது. அதற்கான முதல் சுற்று அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று தொடங்குகிறது. இப்போaட்டி…

44வது செஸ் ஒலிம்பியாட் தொடரின் முதல் சுற்றுப் போட்டிகள் இன்று மாலை 3 மணிக்குத் துவங்கவுள்ளது. அதற்கான முதல் சுற்று அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று தொடங்குகிறது. இப்போaட்டி ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில், 187 நாடுகளைச் சேர்ந்த 2,000-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள், நடுவர்கள், பயிற்சியாளர்கள் பங்கேற்கின்றனர். சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நேற்று மாலை 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட பிரதமர் மோடி செஸ் ஒலிம்பியாட் போட்டியைத் தொடங்கி வைத்தார்.

அண்மைச் செய்தி: ‘அண்ணா பல்கலைக்கழகத்தின் 42வது பட்டமளிப்பு விழா; பிரதமர் பங்கேற்கிறார்’

இந்நிலையில், அதன்படி, முதல் சுற்றின் ஓபன் பிரிவில் இந்திய A அணி ஜிம்பாப்வே அணியுடனும், பெண்கள் பிரிவில் A அணி தஜிகிஸ்தான் அணியுடன் மோதுகிறது. முதல் சுற்றைப் பொறுத்தவரை ஓபன் பிரிவில் பங்கேற்றுள்ள இந்திய A அணி – ஜிம்பாம்பே அணியையும், இந்திய B அணி – ஐக்கிய அரபு அமீரகம் அணியையும், இந்திய C அணி – தெற்கு சூடான் அணியுடன் மோதுகின்றது.

பெண்கள் பிரிவைப் பொறுத்தவரை, இந்திய A அணி – தஜிகிஸ்தான் அணியையும், இந்திய B அணி – வேல்ஸ் அணியையும், இந்திய C அணி – ஹாங்காங் அணியையும் எதிர்கொள்ள உள்ளது. 44வது செஸ் ஒலிம்பியாட் தொடரின் முதல் சுற்றுப் போட்டிகள் இன்று மாலை 3 மணிக்குத் துவங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.