மனிதாபிமான உதவியாக இந்தியா, ஆப்கானிஸ்தானுக்கு 3 ஆயிரம் டன் கோதுமையை அனுப்பிவைத்துள்ளது.
தாலிபான் தீவிரவாதிகளின் பிடியில் இருக்கும் ஆப்கனிஸ்தானில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதனால், ஏராளமான ஏழை மக்கள் போதிய உணவின்றி தவித்து வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அவர்களுக்கு உதவும் நோக்கில், மனிதாபிமான உதவிகளை இந்தியா வழங்கி வருகிறது. ஐநாவின் உலக உணவு திட்ட அமைப்புடன் இணைந்து இந்த உதவிகளை இந்தியா வழங்கி வருகிறது.
ஏற்கனவே, 30 ஆயிரத்து 500 டன் கோதுமையை ஆப்கனிஸ்தானுக்கு அனுப்பியுள்ள இந்தியா, இன்று 3 ஆயிரம் டன் கோதுமையை அனுப்பியுள்ளது. இதன்மூலம், மொத்தம் 33,500 டன் கோதுமை ஆப்கனுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் உள்ள அட்டாரி – வாகா வழியாக லாரிகள் மூலமாக இந்த உணவுப் பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
இந்திய வெளியுறவுத் துறை இதனை தெரிவித்துள்ளது.
ஆப்கனுக்கு அனுப்பிவைக்கப்படும் உதவிகள் முறையாக விநியோகிக்கப்படுவதை உறுதி செய்யும் நோக்கில், தொழில்நுட்பக் குழுவை அந்நாட்டுக்கு அனுப்பிவைக்கப் போவதாக இந்தியா கடந்த வியாழக்கிழமை அறிவித்தது.
அதன்படி, ஆப்கனுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள தொழில்நுட்பக் ககுழுவினர் தற்போதது காபூல் சென்றுள்ளதாகவும், அங்குள்ள இந்திய தூதரகத்தில் இருந்தவாறு கண்காணிப்புப் பணிகளை அவர்கள் மேற்கொள்வார்கள் என்றும் இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.