முக்கியச் செய்திகள் உலகம்

அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட துப்பாக்கி கட்டுப்பாடு மசோதா!

அமெரிக்க நாடாளுமன்றத்தில் துப்பாக்கி கலாச்சாரத்தை கட்டுப்படுத்தும் மசோதாவிற்கு அதிபர் ஜோபைடன் கையெழுத்திட்டுள்ளார். 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த விக்ரம் படத்திற்கு தமிழகம் முழுவதும் மாபெரும் எதிர்ப்பார்ப்புகள் இருந்தாலும் ஒரு விமர்சனங்களும் வைக்கப்பட்டது. அதில் முக்கியமானது, ‘தமிழகத்தில் துப்பாக்கி கலாச்சாரமே இல்லாத போது உலகின் அத்தனை ரக துப்பாக்கிகளையும் கொண்டுவந்து தமிழ் சினிமாவில் சொருகியது ஒட்டவேயில்லை’ என்பதுதான். இதைப்பற்றி கேள்வி எழுப்பப்பட்டபோது பதிலளித்த லோகேஷ், ‘western படங்களின் தாக்கத்தால் தான் ஹாலிவுட்டுக்கு நிகராக வகை வகையான gunகளை வைத்து எடுத்தோம்’ என்றார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மேற்கத்தைய படங்களில் முக்கியமாக 19ம் நூற்றாண்டுகளில் கதைக்களத்தை கொண்டு வரும் கவ் பாய் படங்களில் எல்லாம் துப்பாக்கி கடைகள் மளிகை கடை போல் ஊருக்கு ஒன்று இருப்பது போல் காட்சிகள் இடம்பெற்றிருக்கும். பணம் இருக்கும் யார் வேண்டுமானாலும் துப்பாக்கி கடைக்கு சென்று வசதிக்கேற்ப விதவிதமான ரிவால்வர்களையும் தோட்டாக்களையும் அள்ளிக்கொண்டு செல்லலாம். துப்பாக்கிக்கு அணுமதியில்லாத ஒரு ஊரை விசித்திரம் நிறைந்த கட்டுப்பாடுகள் உடைய ஊர் போல் காட்சிப்படுத்தியிருப்பார்கள். 19ம் நூற்றாண்டு முதலே கலாச்சார ரீதியாக அமெரிக்காவில் இயல்பாக புழங்கும் துப்பாக்கி கலாச்சாரத்தையே பெரும்பாலும் அந்த கவ் பாய் படங்களில் பிரதிபலித்திருக்கும்.

அமெரிக்க நாடானது அடுத்தடுத்த காலங்களில் பொருளாதாரத்திலும் சட்டம் ஒழுங்கிலும் மற்ற நாடுகளை விட மேம்பட்டு வளர்ந்துவிட்டதாக கருதப்பட்டாலும் இப்பவும் அங்கே துப்பாக்கி சர்வசாதாரணம் தான். கொரோனாவின் இரண்டாம் அலையின் போது உலக நாடுகளை போல் அமெரிக்கர்களும் வேலை இன்றி பொருளாதார நெருக்கடிகளால் தவித்தனர். கொஞ்சம் வசதி படைத்தவர்கள் எல்லாம் ஒரு கட்டத்திற்கு மேல் அத்தியாவசிய பொருட்கள் எல்லாம் கொள்ளையடிக்கப்படலாம் என்று அஞ்சி பாதுகாப்பிற்காக துப்பாக்கி கடையில் வரிசையில் நின்ற காட்சிகளை பார்த்திருபோம். ஒரு பக்கம் கள்ளச்சந்தையில் துப்பாக்கி விற்பனை படு ஜோராக நடந்தாலும் இன்னொரு பக்கம் முறையான லைசன்சுடனும் எளிதாக வாங்கி விடலாம் என்றே நிலையே அங்கு தொடர்ந்து வந்தது.

சமீபத்தில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் நடந்த துப்பாக்கி சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டனர். இதேபோல் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பள்ளியில் 18 வயதே ஆன சிறுவன் ஒருவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 19 குழந்தைகள் உட்பட 21 பேர் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். இதுபோன்ற தொடர் சம்பவங்களால் அந்த நாடே அதிர்வுக்குள்ளான நிலையில் துப்பாக்கி விநியோகத்தை கட்டுப்படுத்தவேண்டும் என்ற கோரிக்கைகளோடு நிறைய போராட்டங்களும் நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து துப்பாக்கிகளுக்கு கட்டுபாடுகளை விதிக்கும் மசோதோ அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.இதுகுறித்து பேசிய அதிபர் ஜோ பைடன், “இதனால் பல்வேறு உயிர்கள் காக்கப்படும். துப்பாக்கி கலாச்சாராம் தொடர்பாக எதையாவது செய்யுங்கள் என்பதே இதில் பலியானவர்கள் நமக்கு சொன்ன செய்தி. அதை தற்போது நிறைவேற்றியுள்ளோம். இந்த சட்டம் துப்பாக்கி வாங்கும் இளைஞர்களின் பின்னணி தொடர்பான சோதனைகளை கடுமையாக்கும். குடும்பங்களில் வன்முறையில் ஈடுபடுவோருக்கு துப்பாக்கிகளை கிடைக்காமல் செய்யும். இன்னும் நிறைய வேலைகள் உள்ளது என்பது தெரியும். ஆனால் இந்த துப்பாக்கி வன்முறைகளை முழுவதும் ஒழிக்கும் வரையில் நான் ஓயப்போவதில்லை“ என்றும் குறிப்பிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இந்தியா வந்தார் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்

Arivazhagan Chinnasamy

தமிழ்நாட்டு ஏற்றுமதி நிறுவனங்களுக்கு பாதிப்பா?

Arivazhagan Chinnasamy

அதிமுக ஆட்சியில் “சிஸ்டம்” சரியில்லை; அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

EZHILARASAN D