இலங்கை சென்றடைந்த இந்திய நிவாரணப் பொருட்கள்

இந்தியா அனுப்பிய சுமார் 65 கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் இலங்கை தலைநகர் கொழும்பு சென்றடைந்தன. கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி இருக்கும் இலங்கைக்கு இந்தியா பல்வேறு உதவிகளை தொடர்ந்து வழங்கி வருகிறது.…

இந்தியா அனுப்பிய சுமார் 65 கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் இலங்கை தலைநகர் கொழும்பு சென்றடைந்தன.

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி இருக்கும் இலங்கைக்கு இந்தியா பல்வேறு உதவிகளை தொடர்ந்து வழங்கி வருகிறது.

மத்திய அரசின் நேரடி உதவி மட்டுமின்றி தமிழ்நாடு அரசும், கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் மூலமாக நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது.

இந்த ஆண்டு இதுவரை 3.5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான மனிதாபிமான உதவிகளை இந்தியா வழங்கி உள்ளது.

அதோடு, 3.5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பொருட்களை கடனாகவும் இந்தியா வழங்கி உள்ளது.

இதனிடையே, தமிழக அரசும், இலங்கைக்கு 40 ஆயிரம் டன் அரசியையும், 500 டன் பால் பவுடரையும் அனுப்ப உறுதி அளித்துள்ளது.

தனது உறுதிமொழிக்கேற்ப, தமிழக அரசு 2வது தவணையாக அனுப்பிய 14,700 டன் அரிசி, 250 டன் பால் பவுடர் ஆகியவை இன்று கொழும்பு வந்தடைந்தன.

அவற்றை இலங்கை வசம் ஒப்படைக்கும் நிகழ்வில், இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே, இலங்கை சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லா, வர்த்தக அமைச்சர் நளின் ஃபெர்னாண்டோ, நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுமந்திரன், ராதாகிருஷ்ணன், உதய குமார், அங்கஜன் ராமநாதன், செந்தில் தொண்டமான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.