முக்கியச் செய்திகள் இந்தியா கொரோனா

இந்தியாவில் புதிதாக 42,909 பேருக்கு கொரோனா தொற்று

இந்தியாவில் 42,909 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் 42,909 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 34,763 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந் துள்ளனர். இதுவரை 3,19,23,405 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது நாடு முழுவதும் 3,76,324 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் கொரோனாவால் இன்று 380 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோ னாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,38,210 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோ னாவில் இருந்து குணமடைந்தோர் சதவீதம் 97.51 ஆகவும், உயிரிழப்பு சதவீதம் 1.34 ஆகவும் உள்ளது.

நாடு முழுவதும் நேற்று மட்டும் 31,14,696 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள் ளன. இதுவரை 63,43,81,358 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

கேரளா, மகாராஷ்டிரா, ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய 5 மாநிலங்களில் கொரோனா பரவல் மற்றும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Advertisement:
SHARE

Related posts

மடாதிபதி தற்கொலை : சிபிஐ விசாரணைக்கு உ.பி.அரசு பரிந்துரை

Ezhilarasan

கர்ணன் நிச்சயம் நாளை வருவான்: தயாரிப்பாளர் தாணு

Ezhilarasan

தரமான கல்வியை இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் வழங்குகிறது – துணைவேந்தர்

Halley karthi