இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 38,628 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மொத்த பாதிப்பு 3,18,95,385ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 40,017 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். மொத்தமாக இதுவரை 3,10,55,861 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 4,12,153 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.” என தெரிவித்துள்ளது.
உயிரிழப்பை பொறுத்த அளவில், 617 பேர் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த உயிரிழப்பு 4,27,371 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 49,55,138 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை 50,10,09,609 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. மொத்த பாதிப்பில் 1.29 சதவிகிதத்தினர் சிகிச்சையில் உள்ளனர். வாராந்திர தொற்று பாதிப்பு விகிதம் 5 சதவிகிதத்திற்கும் கீழ் குறைந்து 2.39 சதவிகிதமாக பதிவாகியுள்ளது. தினசரி பாதிப்பு விகிதம் 2.21ஆக உள்ளது.
மேலும், இதுவரை 47.83 கோடி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.








