முக்கியச் செய்திகள் இந்தியா கொரோனா

இந்தியாவில் 27,254 பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் 27 ஆயிரத்து 254 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 37,687 பேர் குணமடைந் துள்ளனர். இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 24 லட்சத்து 47 ஆயிரத்து 032 ஆக உயர்ந்துள்ளது.

தொற்று பாதிப்புக்கு ஒரே நாளில் 219 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 42 ஆயிரத்து 874- ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 32
லட்சத்து 64 ஆயிரத்து 175 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்புடன் 3 லட்சத்து 74 ஆயிரத்து 269 பேர், தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

4.8 கோடி பழைய ஆயிரம் ரூபாய் நோட்டு பறிமுதல்!

Halley karthi

விண்வெளியில் மனிதன் பயணித்த மகத்தான 60வது ஆண்டு!

Halley karthi

செப்.12ல் நாடு முழுவதும் நீட் தேர்வு

Halley karthi