முக்கியச் செய்திகள் விளையாட்டு

’பிளே ஆப்’ சுற்று முனைப்பில் சிஎஸ்கே.. ஐதராபாத்துடன் இன்று மோதல்

ஐ.பி.எல். தொடரில் இன்று நடக்கும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியும் மோதுகின்றன.

ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள அந்த அணி, 8 வெற்றி, 2 தோல்வி என்று 16 புள்ளிகளுடன், பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. அடுத்த சுற்று வாய்ப்பை நெருங்கிவிட்ட சென்னை சூப்பர் கிங்ஸ், இன்றைய ஆட்டத்திலும் வெற்றி பெற்றால் முதல் அணியாக ‘பிளே-ஆப்’ சுற்றை உறுதிப்படுத்துவதாக இருக்கும்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின், தொடக்க ஆட்டக்காரர்கள் பாப் டு பிளிஸ்சிஸ், ருது ராஜ் கெய்க்வாட் நல்ல ஃபார்மில் உள்ளனர். மொயீன் அலி, அம்பத்தி ராயுடு, சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா உள்ளிட்டோரும் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு வருகின் றனர்.

பந்து வீச்சில் தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், ஜடேஜா , பிராவோ சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். தோனி, பேட்டிங்கில் தடுமாறி வருகிறார். சுழற்பந்து வீச்சுக்கு எதிராக அவர் எளிதாக விக்கெட்டை பறிகொடுத்து விடுகிறார். இருந்தாலும் அவருடைய கேப்டன்ஷிப் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து செல்கிறது.

சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. அந்த அணி, அடுத்தச் சுற்று வாய்ப்பையும் இழந்துவிட்டது. இதனால் இன்றைய போட்டியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதனால் இன்றைய போட்டி பரபரப்பாக இருக்கும்.

Advertisement:
SHARE

Related posts

தடுப்பூசி போட அரசு கட்டாயப்படுத்தினால் தவறில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Ezhilarasan

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது

Arivazhagan CM

“கொரோனா தடுப்பூசிகளால் இரத்தம் உறைதல் பிரச்னை ஏற்படாது” -டிசிஜிஐ!

Halley Karthik