இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுக்கு 805 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில், கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது. கடந்த நான்கைந்து நாட்களாக தொற்று ஏற்ற இறக்கமாக இருக்கிறது. இந்நிலையில், ஒரே நாளில் 14,348 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்று முன் தினம் 13,451 பேருக்கும் நேற்று 16,156 பேருக்கும் தொற்றுப் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்றைய பாதிப்பு நேற்றை விட குறைந்துள்ளது. தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 13,198 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப் பட்டுள்ளனர்.
இதுவரை 3,36,27,632 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இப்போது 1,61,334 பேர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் ஒரே நாளில் 805 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4,57,191 ஆக உள்ளது.
நாடு முழுவதும் 1,04,82,00,966 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.








