முக்கியச் செய்திகள் சினிமா

ஒரே நேரத்தில் 12 படங்கள்: இந்தியில் அதிகரிக்கும் தமிழ்ப் படங்களின் ரீமேக்

இந்தியில் ரீமேக் ஆகும் தமிழ்ப் படங்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஒரே நேரத்தில் 12 படங்கள் வரை ரீமேக் ஆகி வருகின்றன.

ஒரு மொழியில் ஹிட்டாகும் படங்களை, மற்ற மொழிகளில் ரீமேக் செய்வது வழக்கமானதுதான். கருப்பு வெள்ளை காலத்தில் இருந்தே இது தொடர்ந்து வருகிறது. ஆனால், சமீப காலமாக தமிழில் ஹிட்டான படங்கள், இந்தியில் ரீமேக் ஆவது அதிகரித்துள்ளது.

சூர்யா நடித்து ஓடிடியில் வெளியான ‘சூரரைப் போற்று’ இந்தியில் ரீமேக் செய்யப் படுவதாக நடிகர் சூர்யா சமீபத்தில் அறிவித்திருந்தார். நடிகர் கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ’கைதி’ படம் இந்தியில் ரீமேக் ஆகிறது. கார்த்தி கேரக்டரில் அஜய்தேவ்கன் நடிக்கிறார்.

லோகேஷ் கனகராஜ் இயக்குநராக அறிமுகமான ’மாநகரம்’ படத்தை சந்தோஷ் சிவன் இந்தியில் ரீமேக் செய்கிறார். ’மும்பைகர்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் விக்ராந்த் மாசே ஹீரோவாக நடிக்கிறார்.

நயன்தாரா, யோகிபாபு நடிப்பில் நெல்சன் இயக்கிய ’கோலமாவு கோகிலா’ படம், ’குட்லக் ஜெர்ரி’என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இதில் நயன்தாரா கேரக்டரில் ஜான்வி கபூர் நடிக்கிறார். சித்தார்த் சென்குப்தா இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடர்ந்து நடந்து வருகிறது.

தியாகராஜன் குமாரராஜா இயக்கிய ;ஆரண்ய காண்டம்; படமும் இந்தியில் ரீமேக் ஆகிறது. இதில் ஜாக்கி ஷெராப், ரவி கிருஷ்ணா, சம்பத் ராஜ், யாஷ்மின் பொன்னப்பா, குரு சோமசுந்தரம் உள்பட பலர் நடித்திருந்தனர். டிப்ஸ் நிறுவனம் இதன் ரீமேக் உரிமையை பெற்றிருக்கிறது. விஜய் சேதுபதி, மாதவன் நடித்த ’விக்ரம் வேதா’, அருண் விஜய் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கிய ’தடம்’, ஷங்கர் இயக்கும் ’அந்நியன்’, அஜித்தின் ’வீரம்’, ’வேதாளம்’ ஆகிய படங்களும் ரீமேக் ஆகின்றன.

’குட்லக் ஜெர்ரி’ ஜான்வி கபூர்

சித்தார்த், பாபி சிம்ஹா நடித்த ’ஜிகிர்தண்டா’ படம், ’பச்சன் பாண்டே’ என்ற பெயரில் ரீமேக் ஆகி இருக்கிறது. இதில் அக்‌ஷய்குமார் நடித்திருக்கிறார். அசோக் செல்வன், ரித்திகா சிங், விஜய்சேதுபதி நடித்து தமிழில் வரவேற்பை பெற்ற, ’ஓ மை கடவுளே’ படமும் இந்தியில் ரீமேக் ஆகிறது. தமிழில் இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இந்தியிலும் இயக்குகிறார்.

இன்னும் சில படங்களின் இந்தி ரீமேக் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அதிகமாக தமிழ்ப் படங்கள் இந்தியில் தொடர்ந்து ரீமேக் செய்யப்படுவதை, தமிழ் சினிமாவுக்கான அங்கீகாரமாக ரசிகர்கள் பார்க்கின்றனர்.

-ஏக்ஜி

Advertisement:

Related posts

ஐயூஎம்எல் கட்சிக்கு கடையநல்லூர் தொகுதி ஒதுக்கீடு!

Jeba Arul Robinson

கொரோனா 2ஆவது அலைக்கு சாத்தியக்கூறு குறைவு – அமைச்சர் விஜயபாஸ்கர்

Gayathri Venkatesan

கூடங்குளத்தில் 5,6 உலைகளுக்கான கட்டுமான பணிகள் தொடக்கம்