முக்கியச் செய்திகள் உலகம் இந்தியா செய்திகள்

பிரிட்டனில் இருந்து கோஹினூர் வைரத்தை மீட்க இந்தியா திட்டம்…!

ஐரோப்பிய நாடான பிரிட்டனில் உள்ள கோஹினூர் வைரம், 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பழங்கால கோயில் சிலைகள், சிற்பங்கள், வைரம் ஆகியவற்றை மீட்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து ஆங்கில நாளிதழான டெய்லி டெலிகிராஃப் வெளியிட்டுள்ள செய்தியில், இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னர் ஆங்கிலேயர்களால் கடத்திச் செல்லப்பட்ட தொல்பொருள் சிற்பங்கள், மதிப்புமிக்க பொருட்களையும், பிரிட்டன் ராணி எலிசபெத்துக்கு வழங்கப்பட்ட கோஹினூர் வைரத்தையும் மீட்டுக் கொண்டுவர இந்திய தொல்லியல் துறை திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இது பிரதமர் மோடி மேற்கொள்ளும் முக்கியமான திட்டமாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ள டெய்லி டெலிகிராஃப், இந்த திட்டம் குறித்து இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக பேச்சுவார்த்தையின்போது பேசப்படலாம் என்று தெரிவித்துள்ளது. மேலும் இங்கிலாந்து முழுவதும் உள்ள அருங்காட்சியகங்கள் மற்றும் தனியார் கலை பொருட்கள் சேமிப்பவர்கள் தாமாக முன்வந்து கலைப்பொருட்களை இந்தியாவிடம் ஒப்படைக்க தயாராக இருப்பதாகவும் அந்த செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : ஜெலன்ஸ்கி – ரிஷி சுனக் சந்திப்பு; உக்ரைனுக்கு ஏவுகணைகள், ட்ரோன்கள் வழங்க பிரிட்டன் உறுதி

உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வைரமாக கருதப்படும் 105 கேரட் மதிப்புள்ள கோஹினூர் வைரம், இந்தியாவின் ஒரு பகுதியை ஆட்சி செய்து கொண்டிருந்த மகாராஜா ரஞ்சித் சிங்கிடம் இருந்து பிரிட்டன் மகாராணியாக இருந்த எலிசபெத்துக்கு வழங்கப்பட்டது. இந்தியாவின் பெருமையை பறைசாற்றும் விதமாக அமைந்துள்ள இந்த கோஹினூர் வைரத்தை மீட்டுக் கொண்டுவர நீண்ட காலமாக முயற்சிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தமிழகத்தில் பிறக்கவில்லையே தவிர, நான் தமிழன் தான்!: ராகுல் காந்தி

Saravana

போதுமான தடுப்பூசிகள் கையிருப்பில் இல்லை – மா.சுப்பிரமணியன்

G SaravanaKumar

ஓலா ஆட்டோ, கார் கட்டணம் உயர்வு: பயணிகள் அவதி

Web Editor