இந்தியா வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது- மத்தியமைச்சர்

இந்தியா வளர்ச்சியை நோக்கிய சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார். சென்னை காஞ்சிபுரம் மாவட்டம் மேலக்கோட்டையூரில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்பம் , வடிவமைத்தல் மற்றும் உற்பத்தி நிறுவனத்தின்…

இந்தியா வளர்ச்சியை நோக்கிய சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார்.

சென்னை காஞ்சிபுரம் மாவட்டம் மேலக்கோட்டையூரில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்பம் , வடிவமைத்தல் மற்றும் உற்பத்தி நிறுவனத்தின் 10 வது பட்டமளிப்பு விழா நடைப்பெறாது. விழாவில் சிறப்பு விருந்தினராக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்று 380 மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார்.

முன்னதாக விழாவில் சிறப்புரையாற்றிய மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், IIITDM தேசிய முக்கியத்துவம் வாய்ந்த உயர்கல்வி நிறுவனம். கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த மாணவர்களை உருவாக்கியுள்ளது. நாட்டின் வளர்ச்சிக்கு IITs, IIITDMs மட்டும் போதுமானதல்ல. Institute of eminence என்ற சிறப்பு அந்தஸ்து பெற்ற உயர்கல்வி நிறுவனங்களும் அவசியம் தேவை என்றார்.

உற்பத்தி நிறுவனங்களின் தேசமாக இந்தியா மாற வேண்டும். இந்தியா வளர்ச்சியை நோக்கிய சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறது. 2028-ல் சீனாவை விட, இந்தியாவில் உழைக்கும் வர்க்கத்தினர் ( இளைஞர்கள் ) அதிகம் இருப்பார்கள் என்று ஐ.நா. சபையின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இது இந்தியாவின் மிகப்பெரிய பலமாக இருக்கும் என்று கூறினார்.

உலகளாவிய அளவில் தலைசிறந்த 58 நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் இந்தியர்களே இருப்பதாக பெருமிதம் தெரிவித்த அவர், வரும் காலங்களில் இதே நிலை தொடர மாணவர்கள் தங்கள் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும் எனவும், மாணவர்கள் நிறுவனங்களில் வேலை செய்வதை விட தொழில் முனைவோர்களாக மாறி பலருக்கு வேலைவாய்ப்புகளை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.