திருப்பதி மலைப்பாதையில் மேலும் ஒரு சிறுத்தை சிக்கியது!

திருப்பதி மலைப்பாதையில் பக்தர்களை சிறுத்தை அச்சுறுத்தி வந்த நிலையில், மேலும் ஒரு சிறுத்தை (43வது) சிக்கியுள்ளது. திருப்பதி திருமலைக்கு அலிப்பிரிவழி நடைபாதையில் பாதயாத்திரையாக தினேஷ் என்பவர் குடும்பத்தினருடன் கடந்த 11ஆம் தேதி சென்று கொண்டிருந்தார்.…

திருப்பதி மலைப்பாதையில் பக்தர்களை சிறுத்தை அச்சுறுத்தி வந்த நிலையில், மேலும் ஒரு சிறுத்தை (43வது) சிக்கியுள்ளது.

திருப்பதி திருமலைக்கு அலிப்பிரிவழி நடைபாதையில் பாதயாத்திரையாக தினேஷ் என்பவர் குடும்பத்தினருடன் கடந்த 11ஆம் தேதி சென்று கொண்டிருந்தார். ஆஞ்சநேயர் கோவில் அருகே சென்ற போது அவரது மகள் லட்சிதா திடீரென மாயமானார். அவரை சிறுத்தை இழுத்துசென்றது. இதனையடுத்து அப்பகுதிக்கு சென்ற போலீசார் மற்றும் வனத்துறையினர் சிறுமியை தேட தொடங்கினர். இந்நிலையில் அடர்ந்த வனப்பகுதியில் சிறுமியின் உடலை வனத்துறையினர் மீட்டனர்.

கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்பு இதே பகுதியில் இரவு நேரத்தில் பெற்றோருடன் நடந்து சென்ற மூன்று வயது சிறுவனை சிறுத்தை தாக்கி வனப்பகுதியில் இழுத்து சென்றது. அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வன ஊழியர் ஒளி வெள்ளத்தை பாய்ச்சும் ராட்சத விளக்கை திடீரென்று ஒளிர விட்டதால் சிறுத்தை அந்த சிறுவனை விட்டு சென்றது.
படுகாயம் அடைந்த சிறுவனை மீட்ட போலீசார், திருப்பதியில் உள்ள தேவஸ்தான குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

இதனையடுத்து சிறுத்தையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர். திருப்பதி மலையில் சிறுத்தை நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் கூண்டுகளை அமைத்துள்ளனர். அந்த கூண்டில் ஜூலை மாதம் 22 ஆம் தேதி ஒரு சிறுத்தை சிக்கிய நிலையில் கடந்த 14ஆம் தேதி மற்றொரு பெண் சிறுத்தை சிக்கியது. ஆகஸ்ட் 17ஆம் தேதி 3வது சிறுத்தை பிடிபட்டது.

இந்த நிலையில் இன்று அதிகாலை 4வது சிறுத்தை கூண்டில் சிக்கியுள்ளது. உயர் அதிகாரிகள் வந்து பார்வையிட்ட பின் அந்த சிறுத்தையை அங்கிருந்து
திருப்பதியில் உள்ள உயிரியல் பூங்காவிற்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.