ஆத்தூர் அருகே இளம்பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்த தாய் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தலைமறைவாக உள்ள போலி டாக்டர் தேடப்பட்டு வருகிறார்.
சேலம் மாவட்டத்தை சேர்ந்த சரண்யா என்பவருக்கும், கடலூர் மாவட்டத்தை சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர் அருளுக்கும் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு கனிஷ்கா என்ற ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் சரண்யா மீண்டும் கர்ப்பம் அடைந்துள்ளார். மீண்டும் பெண் குழந்தை பிறக்குமோ என்று தாயிடம் சரண்யா அச்சம் தெரிவித்ததாக தெரிகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையடுத்து ஆத்தூரில் உள்ள பரிசோதனை நிலையத்தில் சரண்யாவுக்கு ஸ்கேன் செய்யப்பட்டதில் அவரது வயிற்றில் இருப்பது பெண் குழந்தை என தெரிய வந்தது. சட்டத்திற்கு புறம்பாக குழந்தையின் பாலினம் கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து போலி மருத்துவரிடம் அழைத்துச் செல்லப்பட்ட சரண்யாவுக்கு கருக்கலைப்பு நடைபெற்றது.
இதன் பின்னர் சரண்யாவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு பரிசோதனைக்கு சென்றார். அப்போது மருத்துவர்களிடம் நடந்தவற்றை கூறியுள்ளார். இதையடுத்து மருத்துவர் அளித்த புகாரின் பேரில் 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள போலி மருத்துவரை போலீசார் தேடி வருகின்றனர்.